யாயா கியளே மாஅ யோளோ
மடை மான் செப்பில் தமிய
பொய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கால்; நெய்தல்
இனமீன் இருங்கழி ஓதம் மல்குதொரும்
கயமூழ்ழு மகளிர் கண்ணின் மானும
தண்ணந் துறைவன் கொடுமை
நம்முள் நாணிக் கரப்பாடு உம்மே
யாய்-தாய்,மாயோள்-மாமை நிறம் கொண்டவள்,மடைமான் செப்பு-நீர் நிறைந்த அழகிய குவளை,தமிய-தனியே,வைகிய-வைக்கப்பட்டுள்ள,பொய்யா பூ-சூடாத பூ, பாசடை-பசுமையான இலைகள்,கணைக்கால்-தடித்த காம்பு,நெய்தல்-நெய்தல் பூ ,இனமீன்-கூட்டமான மீன்கள்,இரும்கழி-நெய்தல் நில உப்பங்கழி,கயம்-ஆழமான குளம்,மானும்-ஒத்து இருக்கிற,கரப்பாடு-மறைத்து பேசுதல்
தாய் போன்றவள்,மாமை நிறம் கொண்டவள்,நீர் நிறைந்த அழகான செப்பு குவளையில் தனியே வைக்கப்பட்ட சூடாத பூவை போன்று உடல் மெலிந்தவள்.பசுமையான இலைகளுடன்,தடித்த காம்புகளை உடைய நெய்தல் பூவானது ,மீன்கள் கூட்டமாக உப்பங்கழியில் வருவதற்கு காரணமான,வெள்ளம வரும்போது,நீரில் மூழ்கும்.அந்த காட்சியானது ஆழமான குளத்தில் மூழ்கிக்குளிக்கும் பெண்களை போன்று இருக்கும்,அத்தகைய நீர்துறையை உடைய தலைவன் தன்னை பேணாது பரத்தையை பேணும் கொடுமையை நம்மிடம் மறைத்து பேசுகிற தலைவியாகிய இவள் கற்பு பூண்டவள்.
நம்ம ஆளு சின்னவீடு செட்டப் பண்ணிட்டாரு.ஊரெல்லாம் தெரிஞ்சிபோச்சு.வீட்டுக்கார அம்மா ரொம்ப வருத்த படுறாங்க,இருந்தாலும் யாருட்டையும் சொல்லறது இல்ல.அத பாத்த அவங்க பிரண்ட் மேல உள்ள மாதிரி வருத்தப்பட்டு சொல்லுறாங்க
குவளையில் பூ
குவளையில் பூ
பசுமை இலைகளிடையே பூ
உப்பங்கழி
குளத்தில் குளிக்கும் பெண்
10. பாலை - தோழி கூற்று
யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலின் நாணிய வருமே.
தலைவியானவள்,தலைவன் செல்வம் பெற்று விளங்குவதற்கு காரணமானவள்.பயிற்றம் கொற்று போன்ற பூங்கொத்தில் உள்ள மகரந்தம் தன்மேல் படும் படி உழவர்கள் வலைக்கின்றபடி மெல்லிய கிளைகளை உடைய காஞ்சி மரங்களை உடைய நாட்டின் தலைவனின் கொடுமையை மறைத்து,மறந்து அவனை எதிர்கொள்கிறாள்
காஞ்சிமரமானது நிறைய பூக்களை பூத்து குலுங்கும்.நிலத்தை உழும் உழவர்கள் ,இந்த பூக்கள் நிலத்துக்கு உரமாவதால் .அதை பறித்து வயலில் உதிர்ப்பர்.அப்படி செய்யும் போது பூக்களின் மகரந்தம் உழவர்களின் மீது பட்டு மஞ்சள் நிறமாக இருப்பர்.அப்படி பட்ட ஊரை சேர்ந்த தலைவன் பரத்தை சேரியை நாடி செல்லும் கொடுமையை மறைத்து அவன் வெட்கப்படும்படி அவனை எதிர் கொண்டு வரவேற்கிறாள் .
இப்பாடலில் உழவன் தலைவனாகவும் உழும் நிலம் பரத்தை சேரியாகவும் உழவர் பூக்களை உதிர்ப்பது தலைவன் பரத்தையரை தழுவுதலும் உழவரின் மேல் உள்ள மகரந்தம் தலைவன் பரத்தையை தழுவியதற்கான அடையாளமாகவும் உள்ளுறை உவமம் அமையப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக