கொள்ளுபாட்டியின் பழமொழிகள் -2

1.திருப்பதிக்கு போய் மொட்டை அடிச்சவன  கண்டுபிடின்னானாம்
   
 2.ஆட்டுகிட்ட சண்டை போட்டுக்கிட்டு ,நரிகிட்ட
     பஞ்சாயத்துக்கு போனிச்சாம் ஆட்டுக்குட்டி 

3.கொடலு கூழுக்கு அழும்போது கொண்டை பூவுக்கு அழுதுச்சாம்

4.கடவுளே கட்ட வண்டில போறப்ப பூசாரி புல்லட்டு பைக் கேட்டாராம் 

5.ஆளான ஆளு இருந்தாதான் ஆமணுக்கு கொட்டையிலயும் எண்ணை வடியுமாம் 

6.கேழ்வரகுல நெய் வடியும்னா கேக்குறவுனுக்கு புத்தி எங்க போச்சு 

7.நாய்க்கு வாக்கபட்டா குரைச்சிதான் ஆகணும் 

8.முட்டாளுக்கு கிரீடமா இருக்குறதவிட அறிவாளிக்கு செருப்பா இருக்கலாம்


9.எண்ணெய் கொடமும் கொறைய கூடாது,புள்ள தலையும் காயகூடாதுன்னானாம் 


10.அங்காடிக்காரிய சங்கீதம் பாடச்சொன்னால் வெங்காயம்,கருவேப்பிலைன்னு பாடுவாள் 


12.ஆப்பை புடிச்சவன் நம்ம ஆளா இருந்தா ,அடி பந்தியா இருந்தா என்ன நுனி பந்தியா இருந்தா என்ன?


13.கோழி கூவிதான் பொழுது விடியுதா?நாய் குரைச்சிதான்பொழுது விடியுதா?


14.யோக்கியன் வந்துட்டான் சொம்ப எடுத்து உள்ள வையின்னானாம் 


15.தகப்பன் வெட்டுன  கிணறுன்னா தலைகீழா விழ முடியுமா?

16.சேலை இல்ல சேலை இல்லன்னு சின்னாயி வீட்டுக்கு போன அவ ஈச்சம் பாய கட்டிக்கிட்டு எதுக்க வந்தாளாம்

 17.சும்மா கிடந்த மனியக்காரனை தூண்டி விட்டா ,அவன் போன வருடத்து வாய்தாவையும் சேர்த்து கேட்டானாம்