2.கல்யாண வீட்டுல பாத்தாலே கட்டிக்கிட்டு அழுகிறவன் எழவு வீட்ட கண்டா என்ன
செய்யமாட்டான்
3.மானுக்கு ஒரு புள்ளி ஏறி என்ன ?இறங்கி என்ன ?
4.கடல் வத்தட்டும் காத்து கொடல் வத்தி செத்துசாம் கொக்கு
5.கரிச்சான் காவடி எடுதுச்சாம் வேல் மயில் சொல்ல தெரியாம வேலிக்குள் பூந்துச்சாம்
6.தென்னமரத்து நெழலும் சரி தேவடியாள் உறவும் சரி
7.நொங்கு தின்னவன் போய்ட்டான் நோண்டி தின்னவன் அம்புட்டுகிட்டான்
8.உழுகிறநாளில் ஊருக்கு போய்ட்டு அருக்கிறநாளில் அரிவாள் எடுத்துகிட்டு போனானாம்
9.அரைப்படி அரிசி அன்னதானத்துக்கு விடிய விடிய மேளதாளமாம்
10.எல்லாம் தெரிஞ்ச சாமியாரு பனங்கொட்டைய கரடி முட்டைனராம்
11.கோழியோட மொடத்துக்கு கெடா வெட்டி பூஜை போட்டாப்புல
12.சின்ன நாய் குரைச்சி பெரிய நாய் தலையில் வச்ச மாதிரி
13.நரி இடம் போனா என்ன வலம் போனா என்ன மேல விழுந்து கடிக்காம போனா சரி
14.பூனை வளர்த்த சாமியாரு பொண்டாட்டி கட்டுன மாதிரி
15.மாரியாத்தாளை பெண்டு பிடிக்கிறவனுக்கு பூசாரி பொண்டாட்டி எம்மாத்திரம்
16.வேலை இல்லா மாமியா மருமவனை போட்டு ராராட்டினாளாம்
17.தளுக்கு போச்சு மினுக்கு போச்சு
தலை புள்ளையோட
மொகத்தில் உள்ள பவுசும் போச்சு
மூணாம் புள்ளையோட
18.சும்மா கிடைச்சா எனக்கொன்னு எங்க அப்பனுக்கு ஒன்னுனானம்
19.உரலுக்கு சீலை கட்டினாலும் உத்து உத்து பாப்பா னாம்
20.உள்ள புள்ள உரல நக்கிகிட்டு இருந்தப்ப இன்னொரு புள்ளைக்கு திருப்பதி போனாளாம்
21.என்னைக்கும் சிரிக்காதவ சந்தைல சிரிச்சமாதிரி
22.வெட்கபடுற வேசியும் வெட்கபடாத பொண்டாடியும் உதவமாட்டார்கள்
23.மேயுற மாட்ட நக்குற மாடு கெடுத்த மாதிரி
24.தலைக்கு மேல வெள்ளம போறப்ப சாண் போனாஎன்ன மொழம் போனா என்ன
25.வேலில போனா ஓணான எடுத்து வேட்டில உட்ட
கதையா
26.ஆமை அவிக்கிறது மல்லாக்க அதையும்
சொன்னா பொல்லாப்பு
27.கூத்தியா ஒடம்பா கொள்ளை போவ போவுது
28.ஒண்ட வந்த பிடாரி ஊரு பிடாரிய விரட்டுனிச்சாம்
29.எத்துல புள்ள பெத்து எறவானத்துல தாலா ட்டுனாளாம்.
30.கறக்குறது உழக்கு பாலு ,உதை பல்லு போவ