குறுந்தொகை பாடல் -17,18
18. குறிஞ்சி - தோழி கூற்று
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. -கபிலர்.
வேர்பலா
வேரல்-மூங்கில்,செவ்வி-தலைவி,காதலி,சிறு கோட்டு-சிறிய காம்பு,
மூங்கிலை வேலியாக உடைய வேர்பலாவினை உடைய சாரல் நாட்டு தலைவனே,இவளை திருமணம் செய்து உனக்கு உடையவளாக ஆக்குக!யார் அறிவாரோ!இவள் நிலையை,சிறிய காம்பை உடைய பெரிய பலா பழமானது எந்த தாங்குதலும் இல்லாமல் தொங்குவது போல இவளின் உயிரோ மிக சிறியது.இவள் கொண்ட காதலோ மிக பெரியது
சிறுகோட்டு பலா
மலைபக்கத்து சிறிய கொம்பிலே தோன்றும் பலா நாளுக்குநாள் பருத்து முதிர்ந்து வரும்.உரிய காலத்தில் பறித்து உண்ணுவோர் இல்லாதபோது கொம்பை ஒடித்து தானும் வீழ்ந்து சிதையும்.அதுபோல,இவளிடம் தோன்றி வளரும் காமம் கனியும் இவளை குறித்த காலத்தில் மனம் கொள்ளாதபோது இவள் காமமும் அதை தாங்கிய அவளது உயிரும் சிதையும் ,எனவே சீக்கிரம் இவளை திருமணம் செய்வாக என்பதாகும்
உள்ளுறை உவமம் தலைவனும் தலைவியும் களவு இன்பம் பயப்பது ,பிறர் வேலிக்குள்ளே உள்ள பலாவை அவர் அறியாமலே உண்டது போன்றது.எனவே அவளை ஊர் அறிய திருமணம் செய்வதால் .அவளோடு இல்லறம் பேணி இன்புறுதல் முற்றத்து பலாவை உண்பது போன்றது ,
நம்ப பிள்ளைங்க ரெண்டு பேரும் யாருக்கும் தெரியாம காதல் இன்பம் பண்றாங்க.இதை பாத்த தோழி பொண்ணு இப்படி செய்யாதீங்க .சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா வாழுங்க.அப்படின்னு சொல்லுறாங்க
17. குறிஞ்சி - தலைவன் கூற்று
மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே. -பேரெயின் முறுவலார்.
குதிரை
மா-குதிரை ,மடல்-பனை மடல்,எருக்கங்கண்ணி-எருக்கம் மாலை,மறுகின்-ஊர் தெருவில்,ஆர்க்க-சிரிக்க பிறிதும் ஆகுதல்-உயிர் விடல்
ஓடும் குதிரை என ஓடாத பனைமடல் குதிரையில் ஏறுவர், சூடக்கூடிய மாலை என மலராத மொட்டு எருக்கமாலையை சூடுவார்,அப்படியே வீதியில் தோன்றி பிறரால் நகைக்கபடுவர்,அப்படியும் வெற்றி ஆகாதபோது சாகவும் துணிவர் ,காதல் நோய் கொண்டவர்கள்
எருக்கம் பூ
நம்ம பையன் பொண்ணோட தோழிகிட்ட உதவி கேட்டாரு லவ்வர பாக்க,ஆன அவங்க உதவி பண்ண முடியாதுன்னாங்க,என்னால மேல சொன்ன மாதிரி செய்து என் ஆள பாக்க முடியும்,அப்படியே முடியலன்னா சாகவும் முடியும் அப்படின்கிறான் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக